தமிழ்நாடு

“தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கூடாது” - நீதிமன்றம்

“தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கூடாது” - நீதிமன்றம்

webteam

தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு பணிநீக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதனை எதிர்த்து, ஆசிரியர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை நீதிபதிகள், சி.வி.சண்முகம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது. ஜூன் முதல் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நோட்டீஸ் அனுப்பக்கூடாது என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அதனை ஏற்ற நீதிபதிகள், ஜூன் மாதம் நடைபெறும் தகுதித்தேர்வு முடிவு வெளியாகும் வரை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனி நீதிபதியின் உத்தரவு மூலம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.