தமிழ்நாட்டில் அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த Chennai உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் தொகுதிகளில் வழக்கு முடியும் வரை தேர்தல் தடை விதிக்கப்பட்டது. இதனால் 3 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்ற அதிமுகவை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
இதனால் முதலமைச்சர் விஜய் அந்த தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானது. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பிற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து பிற தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என கேள்வி எழுந்தது.
இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதே நேரம் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் நடத்த தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற இசக்கி சுப்பையாவும், பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற ஜெயக்குமாரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் போட்டியிட்டு பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலியானது. விராலிமலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால் அந்த தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு எந்நேரமும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் சூழல் உருவாகியுள்ளது. அதே போல கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 3 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.