தமிழ்நாடு

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை

webteam

தமிழகத்தில் மின்கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள வீடுகள், சிறுகுறு நிறுவனங்களிடமிருந்து மின் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், மின்கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியுமா என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கும் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து மே 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.