tasmac, ed, high court எக்ஸ் தளம்
தமிழ்நாடு

டாஸ்மாக்கில் ED சோதனை.. தமிழக அரசின் மனு தள்ளுபடி!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்த தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

அமலாக்கத் துறை சட்டவிரோதமாக டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக கூறி டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், பெண் அதிகாரிகள் உட்பட பலர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் வைக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், 1000 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

highcourt, ed

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது சரியே என்றும், அதிகாரிகள் நீண்ட நேரம் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வாதத்தை ஏற்க முடியாது என்றும் தீர்ப்பளித்தனர்.

நாட்டின் நலன் கருதியே சோதனை நடத்தப்பட்டதாகவும், அரசியல் உள்நோக்கம் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.