வேதாரண்யம் அருகே பழங்கள்ளிமேடு கிராமத்தில் கனமழையால் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. நாகையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வேதாரண்யம் அருகே பழங்கள்ளிமேடு கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழையின் காரணமாக விளை நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்து நெற்பயிற்கள் நீரில் மூழ்கியுள்ளன இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.