ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் pt desk
தமிழ்நாடு

பொங்கல் விடுமுறை: சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்... ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணம் செய்யும் பொதுமக்களால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் சென்று உறவினர்களோடு பொங்கலை கொண்டாட நேற்று முதல் பொது மக்கள் பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் சென்று வருகின்றனர்.

இதனால் நேற்று ஜி.எஸ்.டி சாலையில் நெரிசல் ஏற்பட்ட நிலையில், இன்றும் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மார்கெட்டில் பொருட்கள் வாங்க வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில், 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.