செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான விண்ணமங்கலம், மின்னூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி செல்கின்றனர். கடும் பனிப்பொழிவால், வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர்.