டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பால், மது பிரியர்களும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி கல்யாணிபுரத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு, 30 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்தும் மது வாங்க வருவதால், கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதனால் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறது. மேலும், ஒருவர் 5 பாட்டில்களுக்கு மேல் வாங்கிச் செல்லும்போது, போலீஸார் பறிமுதல் செய்வதாகவும், ஆனால் மதுக்கூடத்தில் 10க்கும் மேற்பட்ட பாட்டில்களை வைத்துக்கொண்டு கள்ளத்தனமாகக் கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்தாலும் போலீஸார் தடுப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. அதிகப்படியான கூட்டத்தால் பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் விபத்துகள் நேர்வதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.