தமிழகத்தில் கனமழை file photo
தமிழ்நாடு

தொடரும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு என்ன அலெர்ட்?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதையொட்டி 26 மாவட்டங்களுக்கு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

தென்மேற்கு வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, 23ஆம் தேதிவரை கனமழை தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட், 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் அக்டோபர் 23ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு மழை தீவிரமடையும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் 23ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், அது புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அதிகமடையுமே தவிர குறைய வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்தசூழலில் இன்று கனமழை பெய்துவருவதால் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் 17 மாவட்டங்களுக்கு ‘தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை’ ஆரஞ்ச் அலெர்ட்டும், 9 மாவட்டங்களுக்கு ’ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம்’ மஞ்சள் அலெர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.