தமிழ்நாடு

வேளச்சேரியா? வெள்ள ஏரியா? கனமழையில் மிதக்கும் அவலம்

webteam

சென்னையில் கனமழை தொடர்வதால் வேளச்சேரியில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றி 3 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது

நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பெரும்பான்மையான சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சென்னையின் முக்கியப்பகுதியான வேளச்சேரி, ஏரி போலவே காட்சி அளிக்கிறது,. பல குடியிருப்புகள் தண்ணீருக்குள் மிதக்கின்றன. பல இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றி 3 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியே எடுக்கும் வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.