தமிழ்நாடு

வேலூர்: கொட்டித்தீர்த்த கனமழை: 500 க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சேதம்

webteam

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கனமழையின்போது வீசிய பலத்த காற்றினால் 500 க்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

வெப்பச்சலனம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. குடியாத்தம் பகுதியில் விடிய விடிய பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாமியார்மலை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சாய்ந்தன. இந்த மரங்களில் இருந்து செவ்வாழைக் குலைகளை வெட்டினாலும், தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் அவற்றை விற்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர்.