Tragedy pt desk
தமிழ்நாடு

வால்பாறை | கனமழையால் மண் குன்று இடிந்து விழுந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி - பேத்தி பலி!

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பின் மீது விழுந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

webteam

கோவை மாவட்ட வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமயில், வால்பாறை அடுத்த சோலையார் அணைப் பகுதியில் உள்ள இடது கரை என்ற இடத்தில் மண் குன்று இடிந்து குடியிருப்பு மேல் விழுந்து குடியிருப்பு சேதமடைந்தது. அப்போது அந்த குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த் ராஜேஸ்வரி (42), ஜனன பிரியா (14) ஆகிய பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்.

Landslide

இன்று காலை அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொது மக்கள் உதவியுடன் கற்களை அகற்றி இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரது சடலத்தையும் மீட்டனர்.

இதையடுத்து மீட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.