கனமழை pt desk
தமிழ்நாடு

பருவமழை தீவிரம்: நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை

தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

PT WEB

தென்காசி மாவட்டம்:

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம், வீரசிகமணி, தன்னூத்து, வெள்ளாளங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. அதேபோல் குற்றாலம், செங்கோட்டை புளியரை, கடையநல்லூர் மற்றும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

Heavy rain

சிவகங்கை மாவட்டம்:

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு, விட்டு தூறல் மழை பெய்தது. மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டம்:

தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் மிதமான மழை தொடர்ந்து தற்போது வரை பெய்து வருகிறது. அதேபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடவாதிமங்கலம், கோட்டூர், கலப்பால், பெருகவாழ்ந்தான், உள்ளிக்கோட்டை, வடுவூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

rain

திருநெல்வேலி மாவட்டம்:

திருநெல்வேலி மாநகர பகுதியில் வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.