நெல்லை
நெல்லை pt web
தமிழ்நாடு

நெல்லை: கொட்டி தீர்க்கும் மிக கனமழை; வீடுகளை சூழ்ந்த வெள்ளம்! மூலக்கரைப்பட்டியில் 20 செ.மீ மழை

PT WEB

அதேசமயம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் எனவும், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் 19ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நெல்லையில் அதிகனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கொட்டி தீர்க்கும் மிக கனமழை

தென் கடலோர மாவட்டங்களில் விடாது மிக கனமழை பெய்து வரும் நிலையில், மூலக்கரை பட்டியில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாளை காலைக்குள் 30 சென்டிமீட்டர் என்ற அளவை தாண்ட வாய்ப்புள்ளது. 11 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.

நம்பியார் அணை 18.5 சென்டிமீட்டர் மழை, ராதா புரத்தில் 19 சென்டிமீட்டர் மழை, நாங்குநேரியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.