கடலூரில் உணவின்றி தவிக்கும் மக்கள் pt
தமிழ்நாடு

கடலூரின் கண்ணீர் கதை.. உணவுக்காக தவிக்கும் நிலை!

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் கடலூரின் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், மக்கள் வீடுகளை இழந்து உணவு இல்லாத நிலையில் தவித்து வருகின்றனர்.

PT WEB

கடந்த சனிக்கிழமை தொடங்கி ஃபெஞ்சல் புயலால் கடலூரில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் இருப்பிடம், உணவு இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். முகாம்கள் நிரம்பி வழிவதால் சிலர் சாலையில் தஞ்சமடைந்திருக்கும் அவல நிலையும் உள்ளது. கிடைத்த உணவுப் பொட்டலங்களை முண்டியத்து வாங்கும் மக்களின் நிலை பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.