தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை

webteam

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மெரினா கடற்கரை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, தி.நகர், சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி, பிராட்வே, திருவான்மியூர் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது.

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறும் நிலையில், கிருஸ்துவ மக்கள் தேவாலயங்களில் இரவு நேர வழிபாடு நடத்துவதற்கு சென்ற நிலையில், மழையால் பலர் பாதியிலேயே வீட்டிற்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.