கனமழை web
தமிழ்நாடு

9 மாவட்டங்களில் இன்று கனமழை.. தமிழ்நாட்டில் ஒரு வாரம் கனமழை தொடரும்!

தமிழ்நாட்டில் ஒரு வாரம் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

தமிழ்நாட்டில் ஒரு வாரம் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு வாரத்திற்குப் பலமாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியே இதற்குக் காரணமாகும்.

நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்குவாய்ப்புள்ளதாக வானிலை மையம்தெரிவித்துள்ளது.

கனமழை

மேலும், வரும் நாட்களில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைஅதிகரிக்கும் எனவும், மழை காரணமாக வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக கொட்டித்தீர்த்த மழை..

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும்கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தேனி நகர்,அல்லிநகரம், ஏத்தகோவில், பாலக்கோம்பை, வண்டியூர், மேக்கிழார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் ஆண்டிப்பட்டி நகரில் உள்ள குமுளி-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் பேருந்து நிலையம், வைகைசாலை பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி பெருக்கெடுத்து ஓடியது.

அதேபோல சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களான ராமநாயக்கன்பாளையம், கொத்தாம்பாடி, கல்பகனூர் உள்ளிட்டபகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், தங்கள்விவசாய நிலங்களில் டிராக்டர்கள் மூலம் உழவுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.