தமிழ்நாடு

வேதாரண்யத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: 10,000 உப்பளக தொழிலாளர்கள் வேலை இழப்பு

Rasus

வேதாரண்யம் பகுதியில் பெய்த கனமழையால் 3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கி கரைந்தன. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து ‌தவித்து வருகின்றனர்.

வெப்ப சலனம் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக 3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் முழுமையாக மழை நீரில் மூழ்கி கரைந்து விட்டதால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உப்பு உற்பத்திக்கான தற்போதைய சீசன் முடிவடைந்த நிலையில், மீண்டும் ஆறு மாதங்களுக்கு பிறகே உப்பு உற்பத்தி தொடங்கப்படும் எ‌ன ‌கூறப்படுகிறது.

மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்த உப்பு உற்பத்தி சீசனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து ‌தவித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு வழங்குவதாக இருந்த மழைக்கால நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.