தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

webteam

கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும்‌ அறிவிப்பில், கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச அதிக வாய்ப்பு இருப்பதாகவும், கடல் கொந்தளிப்பாக காணப்‌படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்யும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.