தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தமிழகம் மற்றும் கர்நாடகப்பகுதியில் நிலை கொண்டுள்ளதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், நல்லாற்றங்கரையோரம் வசித்து வந்த மக்கள் திருமண மண்டபங்களிலும், கோயில்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அவிநாசியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். மழையால் உடைமைகள் இழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதோடு, நீர்வழித்தடங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.