வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் 29 ஆம் தேதி வரை, தமிழ்நாடு - புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் அதிகனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பலத்த மழை பொழிந்து வருகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர், மயிலாடுதுறையில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.