தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மழை தொடர்பான செய்திகளை அடுத்தடுத்து பார்க்கலாம்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 8மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாக்கக்கூடும் என்றும், அது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார்வளைகுடா, குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.