தமிழகத்தில் மழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 5ஆவது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.