தொடர் கனமழையின் காரணமாக சென்னை பல்கலைகழகத்தின் கீழான கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக தூத்துக்குடி,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.