கனமழை காரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரையில் சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த மழைநீர், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு முன்பு கனமழைக்காலத்தில், ஆடி வீதி வரை தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கம். ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக, தங்க கொடிமரம் அமைந்துள்ள, கம்பத்தடி மண்டபத்துக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தாழ்வாக இருப்பதால் மழை நீர் புகுவதை தடுக்க முடியாது எனவும், அதில் மழை நீர் தேங்கிய உடன் உடனடியாக அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறினார்.