தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்,ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகையில் நாளை கனமழை பெய்யும்என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 9-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழைக்குவாய்ப்புள்ளது. சென்னை மாநகரைபொறுத்தவரை இன்று இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.