ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டையில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினமான 14ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.