தமிழ்நாடு

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

webteam

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன‌மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கீரனூர், அரக்கோணத்தில் தலா 13 சென்டி மீட்டரும், மீனம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் தலா 11 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 39 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன‌மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை மழை குளிர்வித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை திருவாலங்காடு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. ஒரே இரவில் ஆர்கே பேட்டையில் பத்து சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.