தமிழ்நாடு

சூறைக்காற்றுடன் மழை பல லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன

சூறைக்காற்றுடன் மழை பல லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன

webteam


சூறைக்காற்றுடன் மழை பல லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், புலியங்குளம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு பல லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன. மாலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துபோயிருக்கிறார்கள். ஏக்கருக்கு ஆயிரம் வாழை மரங்கள் வீதம் 2ஆயிரத்து 500 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. குலை தள்ளிய மரங்கள் சாய்ந்ததால் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதால் தோட்டக்கலைத்துறையினர் உரிய ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு நடத்தவுள்ளனர்.