தமிழ்நாடு

பள்ளிப் பிள்ளைகள் வெள்ளநீரில் விபரீத பயணம்

webteam

தமிழக-ஆந்திர எல்லையான திம்மாம்பேட்டை அருகே வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். 

திம்மாம்பேட்டையருகே உள்ளது பிரம்மதேவர்சேனல். அங்குள்ள காணாற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதால், 10 நாட்களுக்கும் மேலாக ஒரு கரையிலிருந்து, மறுகரைக்கு கயிறு கட்டப்பட்டு, அதனை ஆதாரமாக பிடித்துக் கொண்டு, பள்ளி மாணவர்கள் ஆற்றை கடந்து செல்கிறார்கள். வெள்ளத்தையும் மீறி 37 மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கு பாடம் படிக்க சென்றுவருகிறார்கள். இன்றும் வழக்கம்போல பள்ளிக்கு சென்‌ற மாணவர்களில் யமுனா என்ற 2ஆம் வகுப்பு மாணவி தனது உறவினர் உதவியுடன் காணாற்றைக் கடக்க முயன்றபோது தடுமாறினார். வெள்ளத்தின் வேகத்தில் கரையேற முடியாமல் தவிக்க, மற்றவர்கள் முயன்று இருவரையும் காப்பாற்றினர். படிக்கவும்,‌பிற தேவைகளுக்கும் கிராமத்தை விட்டு வெளியே வரவேண்டிய சூழலில் தங்களுக்கு பாலம் கட்டித்‌தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.