தமிழ்நாடு

3 மணிக்கு தொடங்கியது இன்னும் நிற்கவில்லை! சென்னையில் 9 மணி நேரம் கடந்து பொழியும் மழை!

EllusamyKarthik

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் கரையை நோக்கி நெருங்கி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

அசோக் நகர், தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் ராயபுரம், மெரினா, அண்ணா சாலை, அடையாறு, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அம்பத்தூர், கீழ்கட்டளை, நங்கநல்லூர், பாடி, வேளச்சேரி, திருவொற்றியூர், பெரம்பூர், மடிப்பாக்கம், வில்லிவாக்கம், பல்லாவரம், சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் கனமழை. 

நகரின் மற்ற பகுதிகளிலும் மிதமான மழை நீடிக்கிறது.

பிற்பகல் 3 மணியளவில் (நவம்பர் 10) தொடங்கிய மிதமான மழை சென்னையின் பல இடங்களிலும் தொடர்ந்து நீடிக்கிறது. 

திருவான்மியூர், தரமணி, ஒ.எம்.ஆர், ஈ.சி.ஆர், பாலவாக்கம், பெருங்குடி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை. 

சென்னையில் அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்கிறது. 

மந்தவெளி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, அடையாறு, பட்டினம்பாக்கம், ராயபுரம், வியாசர்பாடி, வேளச்சேரி, அண்ணா நகர், போரூர் ஆகிய பகுதிகள் உட்பட புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.