தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு

webteam

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து மறுபடியும் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், மதுரை திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர பிற மாவட்டங்களில் .
வறண்ட வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறும் என்றும் இது தமிழகத்தை நோக்கி வருமா என்பது நாளை மறுநாள் தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.