தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதை தவிர்த்து சில பகுதிகளில் இடியுடன் 30-40 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது. மேலும் வெப்பநிலையை பொருத்தவரை அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் திருப்பூரில் 9 செமீ மழையும் கோவை, காங்கேயம் பகுதிகளில் 6 செமீ மழையும், நாகர்கோவில் சமயபுரம் பகுதிகளில் 5 செமீமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.