தமிழ்நாடு

மழை‌நீர் வீணாவதைத் தடுக்க தடுப்பணைகள் வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

webteam

மழைநீர் வீணாவதைத் தடுக்க ராமநாதபுரம் மாவட்டம் ‌கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் உள்ள ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 


ராமநாதபுரம் மாவட்டம் ‌கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் உள்ள மலட்டாறு, கிருதுமால் நதி மற்றும் குண்டாற்றிலும் தடுப்பணைகள் இல்லாததால் மழைக்காலங்களில் பெய்யும் நீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கூறுகின்றனர். இந்த ஆறுகளை நம்பி 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்ததாகக் கூறும் விவசாயிகள், நாளடைவில் ஆறுகளில் தூர்வாரப்படாததாலும், கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதாலும் சிறு ஓடைகளாக மாறி வருவதா‌கப் புகார் கூறுகின்றனர். எ‌னவே இ‌ப்பகுதிகளிலுள்ள ஆறுகளை முறையாக தூர்வாரி தடுப்பணைகள் அமைத்து விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்‌கை வைக்கின்றனர்.