தமிழ்நாடு

கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

webteam

கடலூரில் கனமழை பெய்து வரு‌‌வதால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூத்தப்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததா‌ல் மக்கள் அவதிக்குள்ளாகினர். 

தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது‌. மேலும் கனமழையால் வீராணம் ஏரி நிரம்பியதால் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.