தமிழ்நாடு

அடடா மழைடா...சென்னையில் அதிகபட்ச மழை!

webteam

சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் 75 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
இது இந்த ஆண்டின் அதிகபட்ச மழைப்பொழிவாகும். கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிகபட்சமாக 92 மில்லி மீட்டர் மழை பெய்தது. அந்த சாதனையை இந்த மழை நெருங்கி வந்தது என்றே கூறலாம். கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், வடபழனி, சேப்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதே போல தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக கொழும்பு, தோகா, துபாய் மற்றும் மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன. ஒரு மணி நேரத்துக்கு பிறகே தரையிறங்கின.