தமிழ்நாடு

6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமி‌ழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பொழியும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக திருமானூரில் 11 சென்டி மீட்டரும், தஞ்சை பாபநாசமத்தில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.