கனமழை காரணமாக சென்னை ராயப்பேட்டை பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில், மழை நீர் தேங்கியுள்ளதால் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக அவர்கள் கூறினர். மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் பகுதியை பார்வையிட்டு தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சுமிபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.