தமிழ்நாடு

4வது நாளாக வால்பாறையில் கனமழை 

4வது நாளாக வால்பாறையில் கனமழை 

webteam

கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வது நாளாக கனமழை பெய்து வருகிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த நான்கு நாளாக வால்பாறை மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

கனமழையால் எஸ்டேட் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தங்களின் நிலை குறித்து புகார் தெரிவிக்க நிரந்தர வட்டாட்சியரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஏற்கனவே வால்பாறையில் இருந்த வட்டாட்சியர் கீழ்பகுதியான ஆனைமலை தாலுக்காவாக மாற்றம் செய்யப்பட்டபிறகு அங்கே பணியமர்த்தப்பட்டார். அதனால் மேல்பகுதியான வால்பாறையில் நடக்கும் சம்பவங்களும் மக்கள் தெரிவிக்கும் புகார்களும் வட்டாட்சியருக்கு சரிவர சென்று சேர்வதில்லை என வால்பாறை பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.