தமிழ்நாடு

சென்னையை தெறிக்கவிடும் ‘மினி வர்தா’ - தமிழ்நாடு வெதர்மேன்

webteam

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் இரவு நேரங்களில் பரவலான மழை பெய்துள்ளது. இதுதவிர வேலூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னை பொறுத்தவரையில் இரவு நேரங்களில் மழை பெய்துள்ளது. இதனால் சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் குறைந்துள்ளது. இந்நிலையில் வெப்பச் சலனத்தால் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கடந்த பல நிமிடங்களாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், மேற்கு அண்ணா நகர் பகுதியில் கடந்த அரை மணி நேரமாக இடைவிடாத மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளார். அண்ணா நகரை “மழை சும்மா தெரிவிக்கவிடுது” என திரைப்பட வசனத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தரையில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், இது ஒரு மினி வர்தா எனவும் கூறியுள்ளார். இந்த மழை பொழிவால் பல மரங்கள் விழுந்துள்ளதாகவும், மரங்களில் அடியே நிற்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.