தமிழ்நாடு

தமிழகம்,‌ புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை!

தமிழகம்,‌ புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை!

webteam

அடுத்துவரும் இரு தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் ‌காரைக்காலின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகிறது. அதன் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை எச்சரிக்கையை தொடர்ந்து நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.