தமிழ்நாடு

தீவிரமடையும் தென்மேற்கு பருவ மழை: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தீவிரமடையும் தென்மேற்கு பருவ மழை: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Rasus

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கிய நிலையில், கேரளாவில் தொடங்கி இப்போது கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தெலங்கானா, ஆந்திராவை பருவ மழை எட்டியுள்ளது. கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் காவிரி உற்பத்தியாகும் குடகு மலைப் பகுதியிலும் கனமழை பெய்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தெலங்கானா, கோவா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது.