தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாவுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுபெற்று இருப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்லில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், 15ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருக்கிறது.
மேலும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.