தமிழ்நாடு

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழகத்தில் காஞ்சிபுரம், தஞ்சை, நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி‌, காரைக்கால் பகுதிகளில் லோசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ வரும் 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கடலூரில் 6 சென்டி மீட்டரும், கேளம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.