செய்தியாளர்: ஸ்ரீதர்
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் கரையோர கிராமங்கள் கதிகலங்கிப் போயிருக்கின்றன.
மருதாடு, வெள்ளப்பாக்கம் கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, கரையோரத்தில் உள்ள மருதாடு, வெள்ளப்பாக்கம் கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் டிராக்டர்கள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்துக்கு ஃபெஞ்சல் புயல் பேரழிவை தந்துவிட்டு சென்றுள்ளது. வீடுகள் மட்டுமின்றி விவசாய நிலம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டதுடன், ஆறும், ஊரும் ஒன்றாக காட்சியளிக்கிறது. இதனால் இயல்பு நிலை என்பது இப்போதைக்கு சாத்தியமானதாக தெரியவில்லை என மக்கள் வேதனைப்படுகின்றனர்.