தமிழ்நாடு

மழை நீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

மழை நீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

webteam

மாங்காட்டில் மழை நீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டில் தேங்கிருந்த மழைநீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார். தகவலறிந்த மாங்காடு காவல்துறையினர், அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. தொடர் மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாங்காடு பகுதியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர்கள் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் கவலை‌ தெரிவித்துள்ளனர். ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை தூர் வாராததே தற்போதைய நிலைக்கு காரணம் என்று அவர்கள் கூறினர். ஆகவே, தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.