திமுக தலைவர் கருணாநிதி தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவேரி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் இன்று அதிகாலை நலிவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் காவேரி
மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். காவேரி மருத்துமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு காவேரி மருத்துவமனையில் அவரை சந்தித்தனர்.
திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைப் பின்னர் உடல்நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. தற்போது மருத்துவர்கள் குழு கருணாநிதியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அவரைக்காண காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இதனால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க, அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.