தமிழ்நாடு

தேக்கடியில் கடும் பனிமூட்டம் - கடுங்குளிர் காலநிலையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

webteam

தேக்கடியில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் சாலைகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்த நிலையில், கடுங்குளிர் காலநிலையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நவம்பர் துவங்கி ஜனவரி வரையிலான மூன்று மாதங்கள் பனிக்காலமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தின் சர்வதேச சுற்றுலா தலமான தேக்கடி மற்றும் குமுளி, வண்டிப் பெரியாறு, வாகமண் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதனால் கடுங்குளிர் காலநிலை நிலவுகிறது. பனி மூட்டத்தால் முகப்பு விளக்கை எரியவிட்டும் சாலைகள் சரிவரத் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். ஆனாலும் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த மூடுபனியும் கடுங்குளிர் காலநிலையும் புது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக அமைந்துள்ளது.