தமிழ்நாடு

நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழகம், புதுச்சேரியில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நாளை மறுநாள மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை எதுவும் இல்லை. நவம்பர் 7,8ஆம் தேதிகளில் அந்தமான், நிகோபாரில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.