தமிழ்நாடு

போகுது கத்திரி: குறையுது வெப்பம்!

போகுது கத்திரி: குறையுது வெப்பம்!

webteam

தமிழக மக்களை கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக வாட்டி வதைத்து வரும் கத்திரி வெயில் இன்றுடன் விடை பெறுகிறது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த நான்காம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் வெப்பம் மக்களை வறுத்தெடுத்தது. பல்வேறு இடங்களில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமான வெப்பம் பதிவானது. வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. கத்திரி வெயில் இன்றுடன் முடிவதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதுதவிர, தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் பட்சத்தில் வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் குறைந்து விடும் என நம்பப்படுகிறது.